இலங்கையில் 62,000 பேரை அரச சேவையில் சேர்ப்பதற்கு தயாராகும் ஜனாதிபதி அநுர

கிட்டத்தட்ட 62,000 பேரை அரச சேவையில் சேர்ப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
25வது தேசிய இளைஞர் மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.
“நாங்கள் மொத்தமாக ஆட்சேர்ப்பு செய்யவில்லை. நாங்கள் ஒரு லட்சம், ஒன்றரை லம்சம் பேரை ஆட்சேர்ப்பு செய்யவில்லை.
எனினும் அரச சேவையை பராமரிக்க தேவையான 62,000 பேரை நாடு முழுவதும் அடையாளம் கண்டுள்ளோம்.
இந்த 62,000 பேரை விரைவில் அரசாங்க சேவையில் சேர்க்குமாறு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். ஆனால் வேலைவாய்ப்பு பிரச்சினை அங்கிருந்து தீர்க்கப்படுமா? அது அங்கிருந்து தீர்க்கப்படாது.
ஆனால் இந்த அரசாங்கம் அரசாங்க செயல்முறை மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் ஒரு பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். அதற்கான திட்டங்களை நாங்கள் வகுத்துள்ளோம்.” என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.