ஈரானில் 11 கணவர்களை நஞ்சளித்து கொன்ற பெண்ணுக்கு கிடைத்த தண்டனை

ஈரானில், 22 ஆண்டுகளாக 11 கணவர்களை நஞ்சு கொடுத்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 56 வயது பெண்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2000ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை நடந்த இந்த கொலைச் தொடரில், எத்தனை பேரை கொன்றேன் என நினைவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அக்பரியின் முதல் இரண்டு திருமணங்கள் தோல்வியடைந்தன. அதன்பின், வயதான நபர்களுடன் திருமணம் செய்து, அதிக அளவு வரதட்சணை பெற்றார்.
சில மாதங்களுக்குள், அந்த கணவர்களை நஞ்சு கொடுத்து கொன்றார். 11 நபர்களில் ஒருவர் மட்டும் உயிர்தப்பியுள்ளார், ஆனால் அவர் புகார் அளிக்கவில்லை.
அக்பரி மணந்த ஆண்கள் வெவ்வேறு நகரங்களில் வசித்தனர். இதனால், முதற்கட்டமாக அனைத்து மரணங்களை ஒன்றோடொன்று தொடர்புபடுத்த முடியவில்லை.
2023இல் அவர் இறுதியாக கைது செய்யப்பட்டபோது, கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்றிருந்த கொலைகள் அம்பலமானது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அக்பரியின் தீவிர மனநிலை, திட்டமிட்ட கொலைகள் மற்றும் அவை ஏற்படுத்திய சமூகப் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, மரண தண்டனை வழங்கியுள்ளது.
இந்த சம்பவம் ஈரானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.