ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் மூலம் 5 மாதங்கள் ஆய்வுக்குப் பின் பூமிக்கு புறப்பட்ட நாசா வீரர்கள்!

சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் (ISS) 5 மாதங்கள் தங்கியிருந்து பல்வேறு அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட்ட நாசாவின் க்ரூ-10 வீரர்கள் தற்போது பூமிக்குத் திரும்பி வருகின்றனர்.
நான்கு நாசா விண்வெளி வீரர்களும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் (Dragon) விண்கலத்தில் நேற்று ISS-இலிருந்து புறப்பட்டனர். இந்த விடைபெறும் தருணங்களை நாசா நேரலைவாக வெளியிட்டுள்ளது.
விண்கலம், அமெரிக்காவின் மேற்குக் கரையில் உள்ள பசிபிக் கடலில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமாக 146 நாட்கள் நீண்ட பயணத்தில், 200-க்கும் அதிகமான விஞ்ஞான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.
(Visited 5 times, 1 visits today)