இலங்கை

தமிழர் கலாச்சாரத்தில் அதிக ஆர்வம் – இலங்கையில் பரதநாட்டியம் பயிலும் போலந்து பெண்

போலந்து நாட்டைச் சேர்ந்த பெண்மணியொருவர் திருகோணமலை ஆனந்த பிரகதீஸ்வரா கலாலயாவில் பரதக்கலையின் சில படிநிலைகளை பயின்றிருந்தார்.

போலந்து நாட்டில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த தோமஸ் ஜொயன்னா தம்பதியினர் (09) நடன ஆசிரியர் திருமதி மேனகா பாக்கியராஜாவின் வழிநடத்தலில் அவருடைய மாணவிகளுடன் இணைந்து நடனக்கலையை பயின்றனர்.

தமிழர்களின் கலை, கலாச்சார பண்பாடுகளில் தாங்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளதாகவும் தங்களைப் போன்று பலரும் பரதக்கலையை பயில மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் குறித்த வெளிநாட்டு தம்பதியினர் தெரிவித்திருந்தனர்.

இலங்கைக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் இலங்கை மக்களுடைய குறிப்பாக தமிழர்களுடைய வாழ்வியலில் ஆர்வம் காட்டி வருவதாகவும் பெண்கள் தங்களுக்கான மணமகன்களைக்கூட இலங்கையில் தேடுவதாகவும் சுற்றுலாப் பயணிகளுக்கான வழிகாட்டிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இதுபோன்ற கலைகளை சுற்றுலாத்துறையுடன் இணைப்பதன் மூலம் சுற்றுலாத்துறையில் அதிக வருமானத்தை ஈட்ட முடியும் எனவும் தெரிவிக்கின்றனர்.

 

 

 

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்