அறிவியல் & தொழில்நுட்பம்

புதிய சோதனை செய்யும் WhatsApp!

யூசர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக வாட்ஸ்அப் தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இப்போது நிறுவனம் ஒரு புதிய அம்சத்தை சோதனை செய்து வருவதாகவும், இதன் மூலம் யூசர்கள் மெட்டா AI சாட்போட் மூலம் வாய்ஸ் சேட்டை செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் அதன் ஆண்ட்ராய்டு ஆப்பில் மெட்டா AI உடனான வாய்ஸ் சேட்டை சோதித்து வருகிறது. இந்த புதிய அம்சம் யூசர்கள் மெட்டா AI சாட்பாட்களுடன் குரல் வழியாக பேச அனுமதிக்கிறது. இந்த பிளாட்ஃபார்ம்களில் ஏற்கனவே பல சோதனைகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மெட்டா AI வாய்ஸ் சாட் ஆனது லாமா 3.2 AI மாடல் உடன் இணைந்து செயல்படுகிறது. இது ஏற்கனவே டெக்ஸ்ட்களை சுருக்குவது, படங்களை உருவாக்குவது, அடுத்த விடுமுறைக்குத் திட்டமிடுவது போன்ற வேலைகளை செய்கிறது. மெட்டா AI சாட்பாட் ஆனது சிரியைப் போன்ற ஒரு டைனமிக் ஹாலோ ஐகானைக் கொண்டிருக்கும். மேலும், உங்கள் கேள்விகளுக்கு டெக்ஸ்ட் மூலம் ஸ்கிரீனில் பதிலளிக்கும்.

மெட்டா AI-இன் வாய்ஸ் சப்போர்ட் ஆனது வாட்ஸ்அப்பின் பீட்டா வெர்ஷனில் சோதிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தை இயக்குவது எளிதானது. மேலும், வாட்ஸ்அப் அதை டீஃபால்ட்டாக டிஸ்சேபிலாக வைத்திருக்கிறது. எனவே, நீங்கள் ஸ்கிரீனின் கீழ் பகுதியில் வலது பக்கத்தில் உள்ள கம்போஸ் சேட் டேப்க்கு அடுத்ததாக உள்ள மெட்டா AI ஐகானை கிளிக் செய்யவும். இதனையடுத்து மெட்டா AI, போனில் மைக்ரோஃபோன் மற்றும் ஸ்பீக்கரை ஆக்சஸ் செய்ய உங்கள் அனுமதியைக் கேட்கும். நீங்கள் அனுமதி அளித்தபிறகு AI சாட்பாட் உங்கள் கோரிக்கைகளை கேட்டு வாய்ஸ் மூலம் பதிலளிக்கும்.

இதையும் படிங்க: ரூ.1.76 லட்சம் விலையில் ஆப்பிளின் மடிக்கக்கூடிய ஐபோன்… 2026ல் சந்தைக்கு வரும் என எதிர்பார்ப்பு…
மற்ற ஆப்களை ஓபன் செய்து கொள்ளவும் மற்றும் உரையாடலைத் தொடர வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மோட்-ஐ பேக்ரௌண்ட்டில் அக்சஸ் செய்து கொள்ளலாம். இது தவிர மெட்டா AI மாடல் ஸ்கிரீனில் எல்லாவற்றையும் பார்க்க உதவும் வகையில், ஜெமினி லைவ் ஸ்கிரீன் போன்ற கேமரா ஆதரவை வாட்ஸ்அப் கொண்டு வரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த பிளாட்ஃபார்மில் மைக்ரோஃபோனை மியூட் செய்யவும் உங்களை அனுமதிக்கிறது, இது ஸ்கிரீனின் மேல் பக்கத்தில் கிரீன் இண்டிகேட்டர் ஒளிரும்போது உங்களுக்கே தெரியும்.

தற்போது, இந்த அம்சம் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட யூசர் குழுவில் சோதனையில் உள்ளது. எனினும், மெட்டா இது போன்ற செயல்பாடுகளை விரைவில் அனைத்து யூசர்களுக்கும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தகவல்களின்படி, இந்த அம்சத்தின் சோதனை முயற்சி தற்போது முடிவடையும் கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 3 times, 3 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
Skip to content