இலங்கையில் பாடசாலையிலிருந்து இடைவிலகும் 20,000 மாணவர்கள் – பிரதமர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் ஆண்டிற்கு சுமார் 20,000 மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்துடன் கல்வி சீர்திருத்தங்கள் குறித்த கலந்துரையாடலின் போது அவர் இந்தத் தகவலை வெளிப்படுத்தினார்.
கல்வி அமைச்சால் நடத்தப்பட்ட ஆய்வில் இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 20,000 மாணவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகுவதாக தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆண்டுதோறும் சுமார் 300,000 பிள்ளைகள் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்பட்டாலும் அவர்களில் ஒரு பகுதியினர் மட்டுமே பல்கலைக்கழகத்துக்குச் செல்வதாகவும், இன்னும் சிலர் உயர் கல்விக்காக வெளிநாடு செல்வதாகவும் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாங்கள் முயற்சி செய்வதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
(Visited 4 times, 4 visits today)