பிரித்தானியாவில் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்

24 வயது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி பிரித்தானியாவில் பெண்ணொருவரிடம் தவறாக நடந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டார்.
இவர் கடந்த ஜூலை 23ஆம் திகதி பிரித்தானியாவின் மான்செஸ்டரில் பாகிஸ்தான் வம்சாவளி பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதுதொடர்பாக கடந்த 4ஆம் திகதி கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறையினர் ஹைதர் அலியை கைது செய்தனர். அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த பொலிஸார், பின்னர் விசாரணைகள் நிலுவையில் உள்ள நிலையில் பிணையில் அவரை விடுவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஹைதர் அலியை உடனடியாக தற்காலிக இடைநீக்கம் செய்தது. அத்துடன் விசாரணை முடிந்ததும் பொருத்தமான நடத்தை அடிப்படையிலான நடவடிக்கைக்கும் உறுதி அளித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)