செய்தி விளையாட்டு

ஆசிய கோப்பை தொடரில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயம் அடைந்தார்.

4வது டெஸ்ட் போட்டியில் காலில் பந்து தாக்கியதில் கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. காயத்துடன் பேட்டிங் மட்டும் செய்தார். இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்டில் இருந்து ரிஷப் பண்ட் விலகினார்.

இந்த நிலையில் இங்கிலாந்து தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து ரிஷப் பண்ட் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரிஷப் பண்ட்டுக்கு ஏற்பட்டுள்ள காயம் முழுமையாக குணமடைய 6 வாரங்கள் வரை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் அவர் வருகிற செப்டம்பர் 9ந் தேதி முதல் 28ந்தேதி வரை நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரை தவறவிடுவார். மேலும் அக்டோபர் 2ந்தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் இடம் பெறமாட்டார் என்று தெரிகிறது. ரிஷப் பண்ட் இடம்பெறாதது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

(Visited 5 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி