சீனாவில் கோமா நிலைக்குச் சென்றிருந்த மாணவி – திடீரென வந்த கடிதத்தால் நடந்த அதிசயம்

சீனாவில் கோமா நிலைக்குச் சென்றிருந்த மாணவி பல்கலைக்கழகத்திலிருந்து ஏற்புக் கடிதம் வந்தவுடன் எழுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
18 வயது மாணவிக்கு இதயத்தில் ஏற்பட்ட தொற்றால், மருத்துவமனையில் அவர் 7 நாட்கள் கோமா நிலையில் இருந்துள்ளார்.
காவ்காவ்’ பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை எழுதும் போதே காய்ச்சல் வந்தது. காய்ச்சல் மோசமடைந்து, சிகிச்சைக்காக குடும்பம் கடன் வாங்கி சுமாராக 28,000 டொலர்கள் செலவழிக்க நேர்ந்தது.
அவர் னைவற்ற நிலையில் இருக்கும் 8வது நாளில், அவர் சேர விரும்பிய பல்கலைக்கழகத்திலிருந்து ஏற்புக் கடிதம் வந்தது. குடும்பம் அதைப் பார்த்து மகிழ்ச்சியில் உற்சாகமாக கொண்டாட தொடங்கியது.
அந்த கொண்டாட்டத்தின் ஒலி கேட்டதும், மாணவி கண் திறந்து, நினைவு திரும்பினார். மருத்துவர்களும் குடும்பத்தினரும் அதிசயத்தில் மூழ்கினர்.
இப்போது, அந்த மாணவி செப்டம்பர் மாதம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தவையாக இருக்கிறார்.