இந்தியாவிற்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட வரிகளுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்த ட்ரம்ப்!
இந்தியாவிற்கு ஏற்கனவே உள்ள வரிகளுடன் மேலும் 25 சதவீதம் வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்வதாக சுட்டிக்காட்டியுள்ள அவர் ஏற்கனவே விதிக்கப்பட்ட வரிகளுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிப்பதாக அறிவித்தார்.
இந்த நடவடிக்கை அமெரிக்க-இந்திய உறவுகளை மேலும் சிக்கலாக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
இதற்கிடையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாத இறுதியில் முதல் முறையாக சீனாவுக்குச் செல்வார் என்று இந்திய அரசாங்க வட்டாரம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





