20 ஸ்மார்ட் போன்களை உடலில் மறைத்து வைத்திருந்த பிரேசிலிய பெண் பலி!

26 ஸ்மார்ட்போன்களை உடலில் மறைத்து வைத்திருந்த பிரேசிலிய பெண் ஒருவர் பேருந்தில் இறந்துவிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பேருந்தில் மூச்சு விடுவதில் சிரமப்பட்ட அந்தப் பெண் தரையில் படுத்துக் கிடந்தார்.
பேருந்தில் இருந்தவர்கள் அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு இது குறித்து தகவல் அளித்தனர், அவசரபிரிவினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்தபோது அவர் உயிரிழந்து விட்டது தெரியவந்துள்ளது.
அவரது உடலில் 26 ஸ்மார்ட்போன்கள் கட்டப்பட்டிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
அவரது உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மொபைல் போன்களால் ஏற்பட்ட அதிக வெப்பநிலையால் ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.
இருப்பினும், நாட்டின் அதிகாரிகள் அவரது சூட்கேஸில் பல மது பாட்டில்கள் மற்றும் பல மொபைல் போன்களையும் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த மேலுதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.