மரணத்திற்கு பிறகும் வாழ்வு : ஜெர்மனி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு!

ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான டுமாரோ பயோ வினோதமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது ஒருவர் உயிரிழந்த பிறகு அவர்களின் உடல்களைப் பாதுகாப்பதாக அறிவித்துள்ளனர்.
எதிர்காலத்தில் மனித அறிவியல் வளர்ச்சியால் உயிரிழந்தோரை மீண்டும் உயிருடன் கொண்டு வர முடிந்தால் இது அவர்கள் மீண்டும் உயிர் பெற வாய்ப்பு தருவதாக இருக்கும் என நம்பப்படுகிறது.
இந்நிலையில் பல செல்வந்தர்கள் ஏராளமான பணத்தை செலவழித்து தங்கள் உடலை பதப்படுத்த ஏற்பாடு செய்துவருவதாக செய்திகள் கூட வெளியாகியிருந்து.
இதற்காக $200,000 (ரூ.1.74 கோடி) கட்டணமாக வசூலிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
உயிரிழந்தோர் உடலை மிகக் குறைந்த வெப்பநிலைக்கு விரைவாகக் குளிர்விப்பதன் மூலம் முழு உடல் கிரையோப்ரிசர்வேஷனை வழங்குகிறது. இது செல் சேதம் மற்றும் சிதைவைத் தடுக்க உதவுகிறது.
(Visited 4 times, 4 visits today)