Galaxy Book4 Edge அறிமுகம்… சிறப்பம்சங்கள் என்ன?

சாம்சங் நிறுவனம், தனது புதிய ஏஐ மூலம் இயங்கும் புதிய கேலக்ஸி புக் 4 எட்ஜ் என்கிற புதிய லேப்டாப்பை ஜூலை 31ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்னாப்டிராகன் எக்ஸ் பிராசசர் மூலம் இயக்கப்படும் இந்த லேப்டாப், மைக்ரோசாப்ட் கோபைலட்+ மற்றும் கேலக்ஸி ஏஐ அம்சங்களுடன் இணைந்து செயல்திறனை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயண நேரங்களில்கூட வேலையை பாதிக்காத வகையில், 27 மணிநேர பேட்டரி ஆயுளுடன் வருகிறது.
பிளாஸ்டிக், கண்ணாடி மற்றும் அலுமினியம் போன்ற மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் உருவாக்கப்பட்ட பசுமையான வடிவமைப்பைக் கொண்டது.
புதிய ஆர்டிக் ப்ளூ நிறத்தில் கிடைக்கும்
கேலக்ஸி ஏஐ மற்றும் இணைப்பு அம்சங்கள்:
கேலக்ஸி புக் 4 எட்ஜ், லிங்க் டூ விண்டோஸ், மல்டி கன்ட்ரோல், செகண்ட் ஸ்கிரீன் போன்ற அம்சங்களுக்கான ஆதரவைக் கொண்டுள்ளது. இது ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிசி-க்கிடையிலான தடையற்ற இணைப்பை வழங்குகிறது. சேட் அசிஸ்ட் மற்றும் லைவ் டிரான்ஸ்லேட் போன்ற கேலக்ஸி ஏஐ சேவைகள், சாதனங்களுக்கு இடையேயான நேரடித் தொடர்பை மேலும் மேம்படுத்துகின்றன.
செயல்திறன் மற்றும் பாதுகாப்பு:
குவால்காம் ஸ்னாப்டிராகன் எக்ஸ் பிராசசர் மற்றும் 45 டாப்ஸ் என்பியு மூலம் மேம்பட்ட ஏஐ செயல்திறனைக் கொண்டிருக்கும்
அட்ரினோ ஜிபியு முன்னதாகவே இணைக்கப்பட்டுள்ளது
கோகிரியேட்டர் (Cocreator) அம்சம் வழியாக, பயனர்கள் வரைபடங்கள் மற்றும் குறிப்புகளைக் கொண்டு ஏஐ மூலமாக கலைப் படைப்புகளை எளிதாக உருவாக்கலாம்.
விண்டோஸ் ஸ்டூடியோ எபெக்ட்ஸ் உதவியுடன் வீடியோ அழைப்புகளில் ஸ்டூடியோ தரமான அனுபவம்
சாம்சங் நாக்ஸ் (Samsung Knox) மூலம் வன்பொருளிலும், மென்பொருளிலும் பல அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
மைக்ரோசாப்ட்டின் பாதுகாப்பான பிசி (Microsoft Secured-Core PC) சான்றிதழ் பெற்ற கேலக்ஸி புக் 4 எட்ஜ், நிறுவன பயன்பாட்டிற்கு தேவையான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தரநிலையை வழங்குகிறது.
இவ்வாறாக இந்த லேப்டாப், உற்பத்தித் திறனை விரிவாக்க விரும்பும் தொழில்முனைவோருக்கும், பயணத்திலும் பணிபுரியும் பயனர்களுக்கும் சிறந்த தேர்வாக அமைகிறது.