இலங்கை சென்ற இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

8 கிலோ 220 கிராம் குஷ் போதைப்பொருளுடன் இரண்டு இந்தியர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு விமான நிலைய வருகை முனையத்தில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் வழங்கிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட இரண்டு சோதனைகளில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஒரு சந்தேக நபர் 04 கிலோ 112 கிராம் குஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார், மற்ற சந்தேக நபர் 04 கிலோ 108 கிராம் குஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் 38 மற்றும் 47 வயதுடைய இந்தியர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
(Visited 3 times, 3 visits today)