ஐரோப்பா

ரஷ்யாவில் வெடித்து சிதறிய எரிமலை :தீப்பிழம்புகள் வெளியேற்றம்!

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷியாவின் மிகப்பெரிய எரிமலை வெடித்து சிதற தொடங்கி உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரத்துக்கு பிறகு கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள 15 ஆயிரம் அடி உயரம் கொண்ட க்ளூச் செவ்ஸ்காய் எரிமலை வெடித்து சிதறியது.

அதில் இருந்து தீப்பிழம்புகள் வெளியேறி வருகின்றன. இந்த எரிமலை வெடிப்பை ரஷிய அறிவியல் கழகத்தின் யுனைடெட் புவி இயற்பியல் சேவை உறுதி செய்துள்ளது.

இதற்கிடையே அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட பெரிய சுனாமி அச்சுறுத்தல் முற்றிலும் கடந்துவிட்டதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் தெரிவித்தார். ஆனாலும் வடக்கு கலிபோர்னியா கடற்கரையின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை அமலில் உள்ளது.

சிலி நாடு தனது பசிபிக் கடற்கரையின் பெரும் பகுதிக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையை நீட்டித்து உள்ளது. இந்த நிலையில் பசிபிக் கடல் பகுதியில் மேலும் நில நடுக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

(Visited 14 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்