தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 சதவீத வரி விதிக்க டிரம்ப்

தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
கொரிய அரசாங்கத்துடன் விரிவான வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டதால், அதிக வரி விதிப்பதை அமெரிக்கா தவிர்த்துவிட்டதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது தனது நாட்டின் மீது விதிக்கப்பட்ட வரி நல்ல அளவில் இருப்பதாக தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே-மியுங் கூறியுள்ளார்.
அமெரிக்காவுடன் விரிவான வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், தென் கொரியா மீது அமெரிக்கா 25 சதவீத வரி விதித்திருக்கலாம் என்று வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று அறிவித்தார்