ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 13 அடி உயர சுனாமி அலை தாக்கியதாக தகவல்
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு கம்செட்கா தீபகற்பத்தில் 13 அடி உயர சுனாமி அலை தாக்கியதாக தகவல் வெளியானது.
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் இன்று காலை 8.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கியிலிருந்து சுமார் 85 மைல் தொலைவில், 19 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக USGS தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானின் கடலோரப் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன, மேலும் 1 மீட்டர் வரை அலைகள் ஏற்படக்கூடும் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.
கூடுதலாக, ஹவாய் தீவுகள் மற்றும் அலாஸ்காவின் அலூடியன் தீவுகளின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 24 times, 1 visits today)





