சீனாவில் தொழிலாளருக்கு நிகரான ரோபோ – வேலைத் துறையில் புதிய புரட்சி

சீனாவின் முன்னணி ரோபாட்டிக்ஸ் நிறுவனமான UBTech, மனிதனுக்கு மாற்றாக செயல்படும் புதிய ரோபோவைக் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது, தொழிலாளருக்கு நிகராக வேலை செய்யக்கூடிய திறன் கொண்ட ரோபோ என நிறுவனம் கூறியுள்ளது.
இந்த ரோபோவின் முக்கிய அம்சம், சுய பேட்டரி மாற்றக் கூடுதல் வசதியாகும். ஒருமுறை சார்ஜ் செய்தால், 2 மணி நேரம் நடக்கவோ அல்லது நான்கு மணி நேரம் உட்கார்ந்து செயல்படவோ முடியும். அதன் பின்னர் பேட்டரியை மாற்ற வேண்டும். இது 90 நிமிடங்கள் நேரம் எடுக்கும்.
உலகளாவிய தொழிலதிபர் மோரிஸ் மிசெல், இந்த ரோபோவை “ஒரு முதலாளியின் கனவு” எனக் குறிப்பிட்டார்.
“மனிதர்களுக்கு உள்ள இடைவேளைகள், உடல் சோர்வு போன்ற குறைகள் இல்லாத இந்த ரோபோ, தொடர்ந்து வேலை செய்யும் திறனைக் கொண்டுள்ளது,”
என அவர் கூறினார்.
இதே நேரத்தில், இந்த வகை தொழில்நுட்ப வளர்ச்சி வேலைவாய்ப்புக்கு ஆபத்தாக இருக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, ஆஸ்திரேலியாவில், இவ்வகை ரோபோக்கள் பெருமளவில் வருமானம் குறைந்த வேலைகளை பிடுங்கி, ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.