இலங்கையில் முதல் முறையாக போக்குவரத்து கடமைகளுக்கு பெண் பொலிஸ் அதிகாரிகள் நியமிப்பு
இலங்கை காவல்துறையின் போக்குவரத்து பிரிவு பெண் உத்தியோகத்தர்களை கடமைக்காக ஈடுபடுத்தியுள்ளது.
பொலன்னறுவை போக்குவரத்து பிரிவின் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக பணியமர்த்தப்பட்ட பெண் அதிகாரிகள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதும், வாகனங்களை ஆய்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
வாகன தணிக்கை உள்ளிட்ட போக்குவரத்து பணிகளுக்கு பெண் அதிகாரிகள் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.
பொலன்னறுவைக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து கடமையில் இணைந்து கொண்ட பெண் உத்தியோகத்தர்கள் பிரதேச மோட்டார் சைக்கிள் பிரிவு மற்றும் வாகன மோட்டார் சைக்கிள் பிரிவு ஆகியவற்றில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகனத் தணிக்கை உள்ளிட்ட பிற வாகனங்கள் தொடர்பான பயிற்சிகளைப் பெற்ற இந்த அதிகாரிகள் நேற்று உத்தியோகபூர்வமாக கடமைகளில் இணைந்துள்ளனர்.