தென்கிழக்கு ஈரானில் உள்ள ஒரு நீதிமன்றக் கட்டிடத்தின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் – 06 பேர் பலி!

தென்கிழக்கு ஈரானில் உள்ள ஒரு நீதிமன்றக் கட்டிடத்தின் மீது இன்று (சனிக்கிழமை) அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி மற்றும் கையெறி குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர் என்று அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டின் பதற்றமான தெற்கு மாகாணமான சிஸ்தான் மற்றும் பலுசெஸ்தானில் நடந்த ஆயுத மோதலில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி ஏந்தியவர்களில் மூன்று பேரைக் கொன்றதாக அறிக்கை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் எவரையும் அது அடையாளம் காணவில்லை.
தலைநகர் தெஹ்ரானில் இருந்து தென்கிழக்கே 1,130 கிலோமீட்டர் அல்லது 700 மைல் தொலைவில் உள்ள ஜஹேதானை காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு ஈரானின் கிழக்கு சிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று விரும்பும் ஜெய்ஷ் அல்-அட்ல் என்ற போராளிக் குழுவைக் குற்றம் சாட்டியது. ஆனால் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.