அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி குறித்து டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மின்னிலக்க நாணய மசோதாவைச் சட்டமாக்கியுள்ளார்.
அது அத்துறைக்கான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
அனைத்துலக நிதித்துறையிலும் மின்னிலக்க நாணயத் தொழில்நுட்பத்திலும் அமெரிக்காவின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்த புதிய சட்டம் வழியமைக்கும் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் பில்லியன்கணக்கானோர் அமெரிக்க டொலரைப் பயன்படுத்தி பணத்தைச் சேமிக்கவும் பண மாற்றம் செய்யவும் முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அவ்வாறு செய்யும்போது அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி அதிவேகமடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 3 times, 3 visits today)