சீனாவில் கடுமையான வெப்பம் – சாதனை அளவை எட்டிய மின்சார தேவை

சீனாவில் கடந்த பல நாட்களாக நிலவிய கடுமையான வெப்பத்தால், மின்சாரத் தேவை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
கடந்த புதன்கிழமையில் மட்டும் 1.5 பில்லியன் கிலோவாட்டிற்கும் அதிகமான மின்சாரம் பயன்படுத்தப்பட்டதாக சீன எரிசக்தி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை, சில பகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியசை எட்டும் என வானிலை அறிவுறுத்தல் வெளியிடப்பட்டது. வெப்பமண்டல உயர் அழுத்தம் காரணமாக வடமேற்கு மற்றும் தென்மேற்கு சீனாவில் கடந்த இரண்டு நாட்களில் எட்டு வானிலை நிலையங்களில் வெப்பநிலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
“மின்சாரக் கட்டமைப்பு இதுவரை சுமாராக இயங்கியுள்ளது,” என கூறியுள்ளார் மூத்த எரிசக்தி மற்றும் பருவநிலை மாற்ற நிபுணர் சிம் லீ. இருப்பினும், கோடைக்காலம் தொடரும் போது தான் மின்விநியோகத் துறைக்கு உண்மையான சவால்கள் ஏற்படும் என்றும், சில இடங்களில் மின்விநியோகம் கட்டுப்பாடுகளுடன் செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதத்தில் அதிகரித்த மின்சார உற்பத்தியில் பாதி சூரிய சக்தியின் மூலமே வந்தது. தேசிய எரிசக்தி நிர்வாகம் தெரிவித்ததாவது, இந்த மாதத்தில் மட்டும் மூன்றாவது முறையாக மின்சார உற்பத்தி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது கடந்த மூவாண்டு உச்சத்தைவிட 55 மில்லியன் கிலோவாட்டால் அதிகம்.
சீனாவில் இவ்வாண்டு கோடைக்காலம் தொடங்கியதிலிருந்து, பல மாநிலங்களில் வெப்பநிலை 36 முறை உச்சத்தைத் தொட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.