செய்தி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு ஏற்பட்டுள்ள உடல்நல பாதிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு நரம்பு சம்பந்தப்பட்ட குறைப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

79 வயது டிரம்ப்புக்கு நாள்பட்ட நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகைப் பேச்சாளர் கெரொலைன் லவிட் கூறினார்.

டிரம்பின் உடல்நிலை குறித்து வெள்ளை மாளிகை மருத்துவரின் அறிக்கையை ஊடகங்களுக்கு வழங்கும் போது வெள்ளை மாளிகைப் பேச்சாளர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

அடிக்கடி கைகுலுக்குதல், இதய சிகிச்சைக்காக உட்கொள்ளும் மாத்திரை ஆகியவற்றால் டிரம்ப்பின் வலது கையில் நிறமாற்றம் ஏற்பட்டதாகத் லவிட் குறிப்பிட்டார்.

அதைத் தவிர்த்து டிரம்ப்பின் உடல் நிலை சீராகவே உள்ளது என அவரது மருத்துவர் கடிதம் வழி தெரிவித்தார்.

இருப்பினும், இந்த நேரத்தில் இது ஒரு தீவிரமான நிலை அல்ல என்றும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே இது ஒரு பொதுவான நிலை என்றும் மருத்துவர் தனது அறிக்கையில் விளக்கியுள்ளார்.

டிரம்ப்புக்கு அண்மையில் வலது கை, இருகால்களிலும் வீக்கம் ஏற்பட்டத்தைத் தொடர்ந்து இணையத்தில் அவரது உடல் நிலை பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டது.

 

 

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி