ஐரோப்பா

வெடிப்பொருள் அச்சம் : Prague விமான நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

செக் குடியரசின் தலைநகரமான Prague விமான நிலையத்தில் வெடிப்பொருள் அச்சத்தை  தொடர்ந்து விமான நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகளால் அதிகளவில் விரும்பப்படும் குறித்த விமான நிலையத்தில் முனையம் 2 மூடப்பட்டதாக உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக, முனையம் 2 இல் உள்ள மத்திய பாதுகாப்பு சோதனைச் சாவடி வழியாக அணுகல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த இடத்தில் ஒரு போலீஸ் நடவடிக்கை நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

வெடிகுண்டு தடுப்புப் பிரிவு சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய வெடிபொருள் சாதனம் குறித்த அச்சம் அவசரகால நடவடிக்கையைத் தொடங்கியதை போலீசார் உறுதிப்படுத்தினர்.

குறித்த பகுதியில் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டதற்கான அறிவிப்புகள் கிடைக்கப்பெறவில்லை. அத்துடன் பயணிகளுக்கான மாற்று சேவைகள் குறித்த அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்