36 வீதம் வரி : அமெரிக்காவிற்கு வரி இல்லாத சந்தை அணுகலை அனுமதித்த தாய்லாந்து!

அமெரிக்கப் பொருட்களுக்கு வரி இல்லாத சந்தை அணுகலை அனுமதிப்பது குறித்து தாய்லாந்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
ட்ரம்ப் நிர்வாகம் தாய்லாந்திற்கு 36 சதவீதம் வரி விதித்துள்ளது. இந்நிலையிலேயே மேற்படி பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
முன்னர் மற்ற நாடுகளிலிருந்து லாங்கன் மற்றும் திலாப்பியா மீன் இறக்குமதி மீதான வரிகளைக் குறைத்த தாய்லாந்து, அந்தப் பொருட்களுக்கான வரியை அமெரிக்காவிற்கு பூஜ்ஜியமாகக் குறைக்கலாம் என்று நிதியமைச்சர் பிச்சை சுனஹாவஜிரா முன்மொழிந்துள்ளார்.
அமெரிக்காவிலிருந்து இடது கை ஓட்டும் வாகனங்களை அனுமதிக்கவும், ஏற்கனவே பிற நாடுகளுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் மீதான வரிகளை நீக்கவும் தாய்லாந்து அரசாங்கம் விதிமுறைகளை திருத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இரு தரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர் என்று நிதியமைச்சர் பிச்சை சுனஹாவஜிரா மேலும் கூறியுள்ளார்.