படப்பிடிப்பின் போது பறந்த கார்… உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ்

பா ரஞ்சித் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஆர்யா நடிப்பில் வேட்டுவம் படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. நேற்று இப்படத்தில் இருந்து முக்கிய சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டது.
அதில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் பணியாற்றியுள்ளார். கார் மேலே பறந்து தரையிறங்க வேண்டும் என்பதுதான் காட்சி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக கார் தரையில் உருண்டு விபத்து ஏற்பட்டது.
அப்போது காருக்குள் இருந்த மோகன்ராஜ் பலத்த காயத்தோடு சுயநினைவை இழந்தார். உடனே படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள் ஓடிப்போய் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் எப்போதோ இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தற்போது கடும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வளவு ஆபத்தான சண்டைக் காட்சிகள் தேவைதானா? எதற்காக ஒரு உயிருடன் விளையாட வேண்டும் என பா. ரஞ்சித்துக்கு எதிரான விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இதற்கு காரணமும் இருக்கிறது. அதாவது சம்பந்தப்பட்ட காட்சி படமாக்கும் போது கார் தடம் புரண்டு சுற்றி இருப்பவர்களை பதட்டப்பட வைத்தது. ஆனால் காட்சி படமாக்கப்பட்ட பிறகு தான் சுற்றி இருந்தவர்களை அங்கு போகவே அனுமதித்திருக்கின்றனர்.
அந்த விபத்து நடந்த காட்சி தற்போது வெளியாகி இருக்கிறது.