தென்னாப்பிரிக்கா -HIVக்கான தடுப்பூசி திட்டம் : ட்ரம்பின் முடிவால் பின்னடைவு!

எச்.ஐ.வி தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்குவதற்கு இன்னும் ஒருவார காலம் மட்டுமே உள்ள நிலையில் ட்ரம்பின் உத்தரவால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
வரலாற்றின் மிக மோசமான தொற்றுநோய்களில் ஒன்றைக் கட்டுப்படுத்துவதற்கான மற்றொரு நடவடிக்கையாக தென்னாப்பிரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் மேற்படி சோதனை முயற்சியை முன்னெடுத்துள்ளனர்.
ஆனால் ட்ரம்ப் நிர்வாகமான இதற்கான நிதியை இடைநிறுத்தியுள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உள்நாட்டில் முன்னுரிமைகளில் கவனம் செலுத்துவதாக அறிவித்ததால், இந்தத் திட்டத்திற்காக அமெரிக்காவிலிருந்து வந்த 46 மில்லியன் டாலர்கள் இழக்கப்பட்டுள்ளன. இது தடுப்பூசி சோதனையில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
(Visited 1 times, 1 visits today)