வட அமெரிக்கா

டிரம்ப் விதித்த வரி எதிரொலி – அமெரிக்க மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உலக நாடுகளுக்கு விதித்த வரிகள், தற்போது அமெரிக்க மக்களுக்கு பொருளாதார சுமையாக மாறி வருகிறது.

இதன் காரணமாக, ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு சுமார்2,400 டொலர்கள் கூடுதல் செலவாகும் என ஒரு புதிய பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு, வரி நடவடிக்கைகள் தொடர்பான புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டது.

இதில், டிரம்ப் அரசாங்கத்தின் வரி கொள்கைகள் முக்கிய பொருட்களுக்கு மேலதிக இறக்குமதி வரிகள் விதித்ததாலும், அதன் தாக்கம் நேரடியாக உள்நாட்டு சந்தையில் பொருட்களின் விலையை உயர்த்தியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வரி நடவடிக்கைகள் ஏற்கனவே நெருக்கடியில் உள்ள நடுத்தர வர்க்க மக்களின் குடும்பச் செலவுகளை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளதாகவும் ஆய்வில் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் பல்வேறு பொருளாதார வல்லுநர்கள் இந்த அறிக்கையை மேற்கோளாகக் கொண்டு, வரி கொள்கைகளை மீளாய்வு செய்யும் தேவை குறித்து வலியுறுத்தி வருகின்றனர். வரி மாற்றங்கள் பொதுமக்களின் வாழ்கைத் தரத்திலும், வணிக வலையமைப்பிலும் நேரடி தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதையே இத்தகவல் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

தொடர்ந்து விவாதிக்கப்படும் இந்த நிதி தீர்வுகள், எதிர்கால அரசியல் தீர்மானங்களிலும் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்