சீன விமானத்தில் பெண்ணின் கால்களில் இருந்து வீசிய துர்நாற்றம் – நெருக்கடிக்குள்ளான பயணிகள்

விமானத்தில் பயணித்த பெண் பயணியின் கால்களில் இருந்து துர்நாற்றம் வீசியதால் ஏனைய பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கிங்டாவோவிலிருந்து பெய்ஜிங் செல்லும் ஏர் சீனா விமானத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
புறப்படுவதற்கு முன்பு துர்நாற்றம் வீசுவதைக் கவனித்ததாக ஒரு பயணி கூறினார்.
விமானப் பயணத்தின் நடுவில் விமானப் பணிப்பெண்ணை அழைத்த பயணி ஒருவர் இது குறித்துத் தெரிவித்தார்.
பின்னர் அவருக்கு ஒரு ஜோடி செருப்புகள் வழங்கப்பட்டன.
இதற்கிடையில், சாக்ஸ் அணிந்திருந்த அந்தப் பெண், முன்னால் உள்ள ஜன்னல் அருகே அமர்ந்திருந்த பயணிக்கு சிரமம் ஏற்படுத்தும் வழியில் தனது கால்களை வைத்து உறங்கிய புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
(Visited 2 times, 2 visits today)