நைஜீரியாவில் பட்டினியால் வாடப்போகம் மில்லியன் கணக்கான மக்கள் – கைவிருத்த WFP!!

உலக உணவுத் திட்டம் (WFP) இந்த மாதம் நைஜீரியாவில் உணவுப் பற்றாக்குறையை சந்திக்கும் என்றும், ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தற்போது பட்டினியால் வாடும் அபாயத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் மாதத்தில், ஜனாதிபதி டினுபு நாட்டில் உணவுப் பாதுகாப்பு குறித்து அவசரகால நிலையை அறிவித்தார்.
அதே நேரத்தில் ஜூன் மாதத்தில், WFP மற்றும் UN உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆகியவற்றின் அறிக்கை, நாட்டில் 30.6 மில்லியன் மக்கள் இப்போது உணவு நெருக்கடியை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டியுள்ளது.
தீவிரமடைந்து வரும் மோதல்கள், பொருளாதார சவால்கள் மற்றும் காலநிலை மாற்ற தாக்கங்கள் காரணமாக 5.4 மில்லியன் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை சந்தித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போது, பட்டினிக்கு எதிரான கடைசிப் பாதுகாப்பாகக் கருதப்படும் UN நிறுவனமான WFP, அதன் செயல்பாடுகளைத் தொடர இனி நிதி இல்லை என்று கூறுகிறது.
“இந்த மாதம் வரை மட்டுமே எங்களிடம் வளங்கள் உள்ளன, மேலும் நிலைமைகள் பார்க்கும் விதத்தில், மக்கள் பட்டினியால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்” என்று WFP நைஜீரியா செய்தித் தொடர்பாளர் சி லேல் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.