இலங்கையில் வீழ்ச்சியடையும் தேங்காய் விலை – அதிகரிக்கும் விற்பனை

இலங்கையில் உள்ளூர் சந்தையில் தேங்காய் விலை சரிவு காரணமாக தேங்காய் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதற்கேற்ப தங்கள் வருமானமும் அதிகரித்துள்ளதாக தேங்காய் வியாபாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களில், ஒரு தேங்காய் 220 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
எனினும் தற்போது ஒரு தேங்காய் 100 முதல் 170 ரூபாய் வரையிலான விலையில் விற்கப்படுவதாக தேங்காய் வியாபாரிகள் தெரிவித்தனர்.
வரும் மாதங்களில் தேங்காய்களின் விலை மேலும் குறையும் என்றும், தற்போது சந்தையில் தேவையை விட தேங்காய் உற்பத்தி அதிகமாக இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
(Visited 4 times, 4 visits today)