சீனாவை உலுக்கும் காலநிலை – ஒரு பக்கம் கனமழை மறுபக்கம் வாட்டி வதைக்கும் வெப்பம்

சீனாவின் சில பகுதிகள் கனத்த மழைக்குத் தயாராகும் வேளையில் மற்ற சில பகுதிகளில் கடும்வெப்பம் மக்கள் வாட்டி வதைப்பதாக தெரியவந்துள்ளது.
சில இடங்களில் வெப்பநிலை 40 பாகையை எட்டியது. மின்சாரக் கட்டமைப்புகளை நிலையாக வைத்திருக்க அதிகாரிகள் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
மின்சாரத்துக்கான தேவை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. அடுத்த மூன்று நாளுக்குப் பல பகுதிகளில் வெப்பம் நீடிக்கும் என்று வானிலை அதிகாரிகள் எச்சரித்தனர்.
கிழக்கு ஷன்டோங் மாநிலம், மத்திய ஹெனான் மாநிலம், ஷங்ஹாய் ஆகியவற்றில் வெப்பம் அண்மையில் 39 பாகையை எட்டியது.
(Visited 3 times, 3 visits today)