சுவிஸ் விமானத்தில் மோதிய பறவை – விமானியின் செயலால் தவிர்க்கப்பட்ட விபத்து

சுவிஸ் விமானத்தில் பறவை மோதியதால், மீண்டும் சூரிச் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
சனிக்கிழமை பிற்பகல் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் திரும்ப வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளது.
எரிபொருளை எரிக்க கான்ஸ்டன்ஸ் ஏரிப் பகுதியின் மீது விமானம் வட்டமிட்டு, இருபது நிமிடங்கள் கழித்து, சூரிச் விமான நிலையத்திற்குத் திரும்பியதால் விபத்தில் இருந்து தப்பியுள்ளது.
விமானம் முதலில் மதியம் 1:35 மணிக்கு மியூனிச்சிற்குப் புறப்பட்டது. பிற்பகல் 2:20 மணிக்கு, விமானம் மீண்டும் சூரிச்சில் ஓடுபாதையில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சனிக்கிழமை மியூனிச்சில் இருந்து திரும்பும் விமானமும் ரத்து செய்யப்பட்டது.
இருப்பினும், விமானத்திற்கு சிறிய சேதமே ஏற்பட்டதாக தெரிகிறது.
(Visited 2 times, 2 visits today)