மின் கட்டண திருத்தத்திற்கான உத்தேச கட்டண விகிதங்கள் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!
மின் கட்டண திருத்தம் எதிர்வரும் ஜுலை மாதத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், அதற்கான உத்தேச விகிதங்களை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
தற்போதைய மின் கட்டணத் திருத்தத்தின்படி, உள்நாட்டுப் பிரிவில் முதல் 30 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட் மின்சாரத்துக்கு வசூலிக்கப்படும் கட்டணம் 05 ரூபாயாகும். அந்த வகையில் ஒரு மின்சார யூனிட்டுக்கான புதிய கட்டணம் 25 ரூபாயாகும்.
இதற்கிடையில், நுகரப்படும் முதல் 30 யூனிட்டுகளுக்கான நிலையான கட்டணம் 250 ரூபாவாகும். இந்த வகைக்கான தற்போதைய நிலையான கட்டணம் 400 ரூபாவாகும்.
முதலாம் பிரிவினருக்கு குறைந்தபட்சம் 23% நிவாரணம் வழங்கப்படும் என சுட்டிக்காட்டிய அமைச்சர் விஜேசேகர, மொத்தமாக 1,744,000 குடும்பங்கள் உரிய பலனைப் பெற்றுக்கொடுக்க உள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், 31-60க்கு இடைப்பட்ட யூனிட்களுக்கு விதிக்கப்படும் கட்டணம் 9% குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் 0-60 யூனிட்டுகளுக்கு கட்டணம் 7% ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹோட்டல் வகைக்கு 29% – 40% மின் கட்டண திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.