ஊடக செயல்பாடு குறித்து சர்வதேச மாணவர்களுக்கு ஹார்வர்டு பல்கலைக் கழகம் எச்சரிக்கை

சர்வதேச மாணவர்கள் தங்களது ஊடக செயல்பாடு மற்றும் பயணத் திட்டங்கள் குறித்து கவனமாக இருக்குமாறு அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் மற்றும் சீனாவைச் சேர்ந்த மாணவர்கள், குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளைச் சேர்ந்தவர்கள் பயணத்தின்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கண்காணிப்பு தீவிரமாக இருப்பதால், பாஸ்டனை தவிர்த்து, நியூயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையங்களைப் பயன்படுத்தும்படியும் ஹார்வர்டு பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசின் கல்விக் கொள்கைகளை ஏற்க ஹார்வர்டு பல்கலைக் கழகம் மறுத்ததால், இரு தரப்புக்கும் இடையே மோதல் நிலவுகிறது.
(Visited 2 times, 2 visits today)