ஜப்பான் கடல் பகுதியில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள் – இரவு முழுவதும் விழித்திருக்கும் மக்கள்

ஜப்பானில் உள்ள டோகாரா தீவுகளைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அச்சத்தில் இருப்பதாகவும், இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டியுள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஜூன் 21ஆம் திகதி முதல் டோகாரா தீவுகளைச் சுற்றியுள்ள கடலில் நில அதிர்வு செயல்பாடு மிகவும் தீவிரமாக இருப்பதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்றும் அதே பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவான நிலநடுக்கமும் ஏற்பட்டது.
இருப்பினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை, மேலும் சுனாமி எச்சரிக்கையும் வெளியிடப்படவில்லை.
பூமியில் மிகவும் நில அதிர்வு மிகுந்த நாடுகளில் ஒன்றாக ஜப்பான் கருதப்படுகிறது.
ஜப்பானைச் சுற்றியுள்ள பகுதியில் பொதுவாக சுமார் 1,500 நிலநடுக்கங்கள் ஏற்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.