10 நிமிடங்களில் 26,000 அடி கீழே இறங்கிய ஜப்பான் விமானம் – பதற்றமடைந்த பயணிகள்

டோக்கியோவுக்குச் சென்ற ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம், 10 நிமிடங்களில் 26,000 அடி கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பயணிகள் ஒக்ஸிஜன் முகமூடிகளை எடுத்துக்கொண்டு மோசமான நிலைக்குத் தயாராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
191 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் ஷாங்காய் புடாங் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஜப்பானில் கன்சாய் விமான நிலையத்தில் போயிங் 737 விமானம் அவசரமாக தரையிறங்கியது.
ஒரு இயந்திரக் கோளாறு காரணமாக 36,000 அடி உயரத்தில் இருந்து 10,500 அடிக்கும் சற்று குறைவான உயரத்திற்கு விரைவாக இறங்க வேண்டியிருந்தது.
(Visited 32 times, 32 visits today)