இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மொயீன் அலி பயிற்சியாளர் ஆலோசனைப் பணியில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றியைப் பெற்ற இங்கிலாந்து தற்போது ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடந்த வாரம் லீட்ஸில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியாவை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன், வெற்றியின் சந்தோசத்தில் மூழ்கிய இங்கிலாந்து இரண்டாவது டெஸ்டில் களமிறங்குகிறது.
இந்த நிலையில், “இன்று எட்ஜ்பாஸ்டனில் பயிற்சிக்காக இங்கிலாந்தில் மொயீன் அலி பயிற்சி ஆலோசனைப் பணியில் இணைந்துள்ளார்” என்று தி டெலிகிராஃப் பத்திரிகையாளரான வில் மேக்பெர்சன் கூறினார்.
இதனிடையே, பர்மிங்காமில் இந்திய அணிக்கு எதிராக நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான விளையாடும் 11 பேரை இங்கிலாந்து அறிவித்துள்ளது. முன்னதாக, இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாடும் 11 பேரில் இடம்பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் வெளியிடப்பட்ட பட்டியலில் ஆர்ச்சரின் பெயர் சேர்க்கப்படவில்லை. இருப்பினும், ஜூலை 10 ஆம் தேதி லார்ட்ஸில் தொடங்கும் ஐந்து போட்டிகள் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.
இங்கிலாந்து அணி:
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஷோயப் பஷீர், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), ஜோஷ் டோங்கு, கிறிஸ் வோக்ஸ்.