இலங்கை செய்தி

கனடாவில் கல்வி விசா பெற்றுத் தருவதாக கூறி 60 கோடி ரூபா மோசடி

கனடாவில் உள்ள கிளிம்ப் பல்கலைக்கழகத்தில் கல்வி விசா பெற்றுத்தருவதாக கூறி 60 கோடி ரூபாய் மோசடி செய்தாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களின் மோசடியில் பெருமளவான வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பத்தரமுல்லை பெலவத்தை குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு அருகில் நபர் ஒருவர் தாக்கியதாக சந்தேகத்திற்குரிய பெண் மற்றும் ஆணிடம் இருந்து கிடைத்த முறைப்பாட்டையடுத்து, அவர்கள் மூவரையும் தலங்கம பொலிஸாருக்கு அழைத்துச் சென்ற போது, ​​இந்த பாரிய மோசடி குறித்த தகவல் வெளியாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 27 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை