இலங்கை

கனடா படுகொலை தினத்தை அனுஷ்டிக்க வேண்டும் என விமல் வலியுறுத்து!

கனடாவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் 1996 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார்கள். ஆகவே எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதியை ‘கனடா படுகொலை தினம்’ என நாம் அனுஷ்டிக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் தலைமையில் இன்று  (23) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர்,  மே 18 இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது என குறிப்பிட்டு கனடா நாட்டு பிரதமர் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி நாட்டை அவமதித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் கருத்துரைக்கும் கடனாவின் வரலாற்று பக்கத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும். 1996 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் திகதி கனடா நாட்டில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

கனடாவில் தான் உண்மையில் இனப்படுகொலை இடம்பெற்றது. எதிர்ரும் மாதம் 21 ஆம் திகதி அந்த தினத்தை நாம் ‘கனடா இனப்படுகொலை தினம்’ என பாராளுமன்றத்தின் ஊடாக அனுஷ்டிக்க வேண்டும்.

இலங்கையில் இடம் பெறாத இனப்படுகொலையை கனடா அனுஷ்டிக்கும் போது கனடாவில் இடம்பெற்ற இனப்படுகொலையை நாம் அனுஷ்டிக்க வேண்டும். அதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

(Visited 11 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்