கென்யாவில் உணவின்றி, உறைவிடம் இன்றி தவிக்கும் இலட்சக்கணக்கான மக்கள்!
 
																																		கென்யாவில் உள்ள காகுமா முகாமில் வசிக்கும் மூன்று இலட்சம் மக்கள் உண்ண உணவின்றி, உறைவிடம் இன்றி தவிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மார்ச் மாதத்தில் டிரம்ப் நிர்வாகம் ஆதரவை நிறுத்திய பின்னர், ஐ.நா. உலக உணவுத் திட்டத்திற்கான நிதி குறைந்துவிட்டது,
இதனையடுத்து உதவி திட்டத்தை நம்பியிருந்த பெரும்பாலான மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
அதாவது, உகாண்டாவைச் சேர்ந்த ஐந்து குழந்தைகளின் தந்தையான கோமோல், இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது சமீபத்திய மாதாந்திர ரேஷன் தீர்ந்ததிலிருந்து அண்டை வீட்டாரின் உதவிகளைப் பெற்று வருகிறார்.
ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு, சில சமயங்களில் இரண்டு நாட்களுக்கு ஒரு வேளை உணவை உட்கொண்டு உயிர்வாழ்வதாகக் கூறினார்.
இவ்வாறாக அங்கு வசிக்கும் மூன்று இலட்சம் அகதிகள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரியவருகிறது.
 
        



 
                         
                            
