ஈரானின் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரக ஊழியர்களை வெளியேற்ற நடவடிக்கை!
																																		ஈரானின் பாக்தாத்தில் உள்ள அத்தியாவசியமற்ற அமெரிக்க தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் ஈராக்கில் இருந்து வெளியேற்றப்பட உள்ளதாக அமெரிக்க அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வெளியேற்றத்திற்கு என்ன காரணம் என்பதை அதிகாரிகள் சரியாகக் கூறவில்லை, ஆனால் ஈரானில் ஒரு நடவடிக்கையைத் தொடங்க இஸ்ரேல் தயாராக இருப்பதாக அவர்களிடம் கூறப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சில அமெரிக்கர்கள் இப்பகுதியை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டதற்கான ஒரு காரணம் இது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்,
ஈராக்கில் உள்ள சில அமெரிக்க தளங்களில் ஈரான் பதிலடி கொடுக்கக்கூடும் என்று அவர்கள் எதிர்பார்த்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்தே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
(Visited 2 times, 1 visits today)
                                    
        



                        
                            
