உலகம் செய்தி

வெள்ளி கிரகத்திற்கு அருகில் ராட்சத விண்கல் கூட்டம் – எந்நேரத்திலும் பூமியைத் தாக்கும் அபாயம்

வெள்ளி கிரகத்திற்கு அருகில் மறைந்திருக்கும் ராட்சத விண்கல் கூட்டம், பூமிக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறக் கூடும் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலின் சாவோ பாலோ பல்கலைக் கழக வானியலாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் பின்னர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

‘இணை-சுற்றுப்பாதை விண்கல்’ என்றழைக்கப்படும் இந்த விண்வெளிப் பாறைகள், பொதுவாக கிரகங்களை நேரடியாகச் சுற்றாமல் அவற்றின் அருகே பயணிக்கின்றன.

இவற்றுக்கென ஒரு நிலையான சுற்றுவட்டப் பாதை இல்லாததால், இவற்றைக் கண்காணிப்பது விஞ்ஞானிகளுக்கு மிகவும் கடினமானதாக உள்ளது.

சூரியனுக்கு அருகில் பயணிப்பதால் ஏற்படும் அதிகப்படியான ஒளி காரணமாக, இவை பெரும்பாலும் கண்காணிப்புக் கருவிகளின் பார்வையில் இருந்து தப்பிவிடுகின்றன.

சமீபத்திய ஆய்வின்படி, வெள்ளி கிரகத்தைச் சுற்றி தற்போது 20 பிரம்மாண்ட விண்கல்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவற்றில், ஒரு கிரகத்தின் சுற்றுப்பாதைக்கு முன்னாலோ அல்லது பின்னாலோ நிலையாகப் பயணிக்கும் ‘ட்ரோஜன்’ (Trojan) வகை விண்கல்லும் அடங்கும். அதுமட்டுமின்றி, ‘சூஸ்வே’ (Zoozve) என்று பெயரிடப்பட்ட ‘குவாசி-மூன்’ (Quasi-moon), அதாவது போலி-நிலா ஒன்றும் இந்தக் கூட்டத்தில் உள்ளது.
இது பூமியைச் சுற்றி வருவது போன்ற தோற்றத்தை அளித்தாலும், உண்மையில் அது சூரியனையே சுற்றி வருகிறது.

இந்த விண்கல் தற்போது பூமிக்கு உடனடி ஆபத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், நீண்ட கால அடிப்படையில் இவற்றின் பாதை கணிக்க முடியாத வகையில் மாறக்கூடும்.

அவ்வாறு பாதை மாறும் பட்சத்தில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பூமியைத் தாக்கும் அபாயம் உள்ளது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

வெள்ளி கிரகத்திற்கு அருகில் பதுங்கியிருக்கும் 20 ‘சிட்டி-கில்லர்’ விண்கல் எதிர்காலத்தில் பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு, ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.

இந்த 20 விண்கற்களும் நமது சூரிய குடும்பத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையில் அமைந்துள்ள விண்கள் சுற்றுவட்டத்தில் (Asteroid Belt) வந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!