இலங்கையில் அதிர்ச்சி – 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி – பிக்கு அடித்துக் கொலை
இலங்கையில் 8 வயது சிறுமி ஒருரைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் சந்தேக நபரான 70 வயதுடைய பௌத்த மதகுரு ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் வைத்தியசாலையில் மரணமடைந்த மேற்படி மதகுரு ஹெட்டிப்பொல பிதேசத்தைச் சேர்ந்த விகாரை ஒன்றில் வசித்து வந்துள்ளார்.
குறித்த பௌத்த மதகுரு சம்பவ தினம் “போதி பூஜா” ஒன்றுக்காக வந்திருந்த சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியே சிறுமியின் உறவினர்களால் குறித்த மதகுரு தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான மதகுரு சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
ஹெட்டிப்பொல பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)





