இலங்கையில் இளம் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவர்

வென்னப்புவ பகுதியில் கணவர் ஒருவர் தனது மனைவியை அடித்து கொலை செய்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று இரவு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவர் இந்த குற்றத்தைச் செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பெண் 21 வயதுடைய ஒரு குழந்தையின் தாய் எனவும் அவர் வென்னப்புவ, தம்பரவில பகுதியில் வசித்து வந்தார் எனவும் தெரியவந்துள்ளது.
கொலை செய்த 29 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட மனைவியும் சந்தேக நபரான கணவரும் ஒரு ஓடு தொழிற்சாலையில் வேலை செய்து வருவதாகவும் அதற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் வசித்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 13 times, 1 visits today)