தினேஷ் ஷாப்டரின் சடலம் தோண்டி எடுக்கப்பட உள்ளது
ஜனசக்தி இன்சூரன்ஸ் குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் சடலம் புதைக்கப்பட்ட குழிக்கு அருகில் துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்காக பொரளை பொலிஸ் அதிகாரிகள் நான்கு பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியும் நோக்கில் அவரது சடலத்தை தோண்டி எடுக்க நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசேட வைத்திய சபை கடந்த 18ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் எழுத்துமூல கோரிக்கையை முன்வைத்தது.
ஐந்து பேர் கொண்ட விசேட வைத்திய சபை, உயிரிழந்தவரின் சடலத்தை தோண்டி எடுத்து பரிசோதனை செய்வதற்கு அனுமதி வழங்குமாறு நீதவான் ராஜிந்த ஜயசூரியவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி, ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் சடலம் வியாழக்கிழமை 25ஆம் திகதி தோண்டி எடுக்கப்பட உள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.