ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலியா கடற்கரையில் இலங்கையர் என கூறப்படும் இளைஞனின் சடலம் மீட்பு

அவுஸ்திரேலியாவின் டிரான்மீர் கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.40 மணியளவில் பிரதேசவாசி ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் பொலிசார் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.

இது சந்தேகத்திற்கிடமான மரணமாக இருக்க முடியாது எனவும், மரணத்திற்கான காரணத்தை கண்டறிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 18 – 25 வயதுக்கு இடைப்பட்ட இலங்கையர் என நம்புவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் உயிரிழந்தவரின் அடையாளத்தை இதுவரையில் கண்டறியாத பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இந்த நபர் வேறு இடத்தில் கடலில் விழுந்து மீண்டும் அழைத்து வரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாகவும், எனினும் இந்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(Visited 8 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி