“இனப்படுகொலை” குறித்த ட்ரூடோவின் கருத்துக்கு இலங்கை கண்டனம்!
BY VD
May 21, 2023
0
Comments
536 Views
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததன் 14வது ஆண்டு நிறைவையொட்டி கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் தமிழர்கள் இனப்படுகொலை குறித்த கருத்துக்கு இலங்கை அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பில் கருத்து வெளியிட்ட ட்ரூடோ, இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட பல காரணங்களால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.
‘நாடு முழுவதும் உள்ள சமூகங்களில் பல ஆண்டுகளாக நான் சந்தித்த பாதிக்கப்பட்ட தமிழ் – கனடியர்களின் கதைகள் மனித உரிமைகள், அமைதி மற்றும் ஜனநாயகம் ஆகியவை குறித்து அலட்சியமாக இருந்துவிட முடியாது என்பதை நினைவூட்டுகின்றன’ எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், இது குறித்து கண்டனம் வெளியிட்டுள்ள இலங்கை அரசு, ட்ரூடோவின் இந்தக் கருத்துகளை நிராகரித்துள்ளது. கொழும்பில் உள்ள கனடா நாட்டு தூதர் எரிக் வால்ஷிடம் ட்ரூடோவின் கருத்துக்களுக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
ஒரு நாட்டின் தலைவர் இவ்வாறு பொறுப்பற்ற கருத்துகளைக் கூறுவது அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக கனடாவிலும் இலங்கையிலும் வெறுப்பை வளர்க்கும் என இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்