கவனிப்பாரற்று நிர்க்கதியில் ரஷ்யாவின் பிரம்மாண்ட கப்பல்
ரஷ்யாவின் பிரம்மாண்ட கப்பல் ஒன்று, ஆன்டிகுவா நாட்டின் ஃபால்மவுத் துறைமுகத்தில் கவனிப்பாரற்று நின்று கொண்டிருக்கிறது.
உக்ரைன் மீதான படையெடுப்பு மற்றும் இங்கிலாந்து மேற்கொண்ட பொருளாதாரத் தடை நடவடிக்கைகளால் ரஷ்யகப்பலுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது.
267 அடி நீளமும், 2 ஆயிரத்து 500 டன் எடையும் 120 மில்லியன் டொலர் மதிப்பிலான ஆல்ஃபா நீரோ என்ற இந்த ஆடம்பரக் கப்பல், ஹெலிகாப்டர் தளம்,சொகுசு அறைகள், உடற்பயிற்சி கூடம், லிஃப்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்டது.
வாரம் ஒன்றுக்கு 10 லட்சம் டொலர் வரை வருவாய் ஈட்டி தந்த இந்த கப்பல், பயன்பாடு இல்லாமல் அநாதரவாக விடப்பட்டுள்ளது.இதையடுத்து, பொருளாதாரத் தடையில் இருந்து அதனை விடுவிக்கும் நடவடிக்கை குறித்து ஆண்டிகுவா நாடு ஆய்வு செய்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
(Visited 4 times, 1 visits today)