பாத்திரங்கள் கழுவும் இயந்திரத்தால் ஆபத்தான பிரச்சினை – ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

தற்போது வீடுகளில் பயன்படுத்தப்படும் dishwasher இயந்திரம் தண்ணீரில் சுமார் 920,000 மைக்ரோபிளாஸ்டிக் துண்டுகளை வெளியிடுவதாக குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கண்டறிந்துள்ளனர்.
வீட்டு பாத்திரங்கள் கழுவும் இயந்திரங்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 33 மில்லியன் பிளாஸ்டிக் துகள்களை கழிவுநீரில் வெளியேற்றுவதோடு, சுற்றுச்சூழலுக்கு பல்வேறு இரசாயனங்களையும் வெளியிடுகின்றன.
இது ஒரு கடுமையான பிரச்சினை என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர், இந்த கழிவுகள் இறுதியில் கடலில் போய் சேரும் என்று கூறுகின்றனர்.
இந்த மைக்ரோபிளாஸ்டிக் கலந்த கழிவுநீரை விவசாய நிலங்களுக்கு அனுப்புவது மனித உயிர்களுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பாத்திரங்கழுவி இயந்திரங்களில் எந்த வகையான பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஆய்வாளர்கள் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.